வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கரூர்: சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காத, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பிக்கு நெருக்கமான அரசு கான்ட்ராக்டரின் அலுவலகத்திற்கு, 'சீல்' வைத்த வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் தம்பி, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக, அவரது வீட்டில் 'சம்மன்' ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ளது. கடந்த, 26ல் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த சென்றனர்.
அப்போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். சோதனை நிறுத்தப்பட்டது.
![]()
|
நேற்று முன்தினம் இரவு அசோக்குமார் வீட்டின் கதவில், 'நேற்று காலை, 10:30 மணிக்கு கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள, வருமான வரித்துறை அலுவலகத்தில், அசோக்குமார் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அதிகாரி நாகராஜ் பெயரில் சம்மன் ஒட்டினர்.
ஆனால், நேற்று அசோக்குமார் ஆஜராகவில்லை. மாறாக ஆடிட்டர் ஒருவர் மூலம், கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், அசோக்குமார் ஆஜராக கால அவகாசம் கேட்டு, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அசோக்குமார் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. இதனால் சில தி.மு.க., நிர்வாகிகள், உள்ளூர் நிருபர்களை தொடர்பு கொண்ட அசோக்குமார், 'நான் சென்னையில் இருக்கிறேன்' என, தகவல் தெரிவித்துள்ளார்.
![]()
|
சங்கர் ஆனந்த், கரூர், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில், 'சங்கர் ஆனந்த் இன்பரா' என்ற நிறுவனத்தின் பெயரில், பாலங்கள் கட்டுதல், தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்று ஐந்தாவது நாளாக, கரூர் காந்தி கிராமம் இ.பி., காலனியில் உள்ள, சங்கர் ஆனந்த் இன்பரா நிறுவன ஊழியர் ேஷாபனா வீடு, கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள ராமவிலாஸ் வீவிங் பேக்டரி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை தொடர்ந்தது.
நேற்று காலை கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, அசோக்குமாரின், அபெக்ஸ்-இம்பெக்ஸ் என்ற டெக்ஸ் நிறுவன அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், 15க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர்.
அப்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.