ஈரோடு: குடும்பத்தகராறு காரணமாக கணவரை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு காளிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும், மனைவி பத்மாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த பத்மா கட்டையால் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணியன் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement