சென்னை: தோட்டக்கலைத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பாக ஜூன் 3 முதல் 3 நாட்கள் செம்மொழிப்பூங்காவில் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இதனை பார்வையிடலாம். இதற்கு நுழைவுக் கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.20ம், பெரியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.