வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இருட்டை விரட்டி ஒளி மிகுந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு என முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மே23ம் தேதி சிங்கப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அங்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2024ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்து சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, அவர், ஜப்பான் சென்றார். அங்கு ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு, சென்னை வருகிறார்.
வெளிநாட்டு பயணம் குறித்து, திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 10 ஆண்டு கால இருளை ஒவ்வொரு பகுதியாக விரட்டிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இருட்டை விரட்டி ஒளி மிகுந்த தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு. அதனால் தான் கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருகிறேன்.
சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்துள்ளது. கடல் கடந்த பயணத்தால் தமிழகத்தில் நிலை உயரும். தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
நத்தை வேக ரயில்வே திட்டங்கள் வேகம் பெற்று இந்தியாவில் புல்லட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை முதலீட்டாளருக்கு ஏற்படுத்தியுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.