'ஹார்லி டேவிட்சன்' நிறுவனம், அதன் 'எக்ஸ் - 440' என்ற ரோட்ஸ்டர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், 'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த பைக்கை இந்தியாவில் தயாரிக்கிறது.
'ராயல் என்பீல்டு கிளாசிக் 350' பைக்கிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கில், 440 சி.சி., ஏர் அல்லது ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
![]()
|
இந்த பைக், வலிமையான சிங்கிள் டவுன்ட்யூப் டியூபுளர் பிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, முன்புற யு.எஸ்.டி., சஸ்பென்ஷன்கள் மற்றும் பின்புற டுவின் ஷாக் அப்சார்பர்கள், 18 மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், தரமான எம்.ஆர்.எப்., டயர்கள், ஹார்லி டேவிட்சன் விசேஷ அடையாளத்துடன் வரும் டெர்ன் இன்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என பலவற்றை கொண்டுள்ளது இந்த பைக்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement