'பி.எம்.டபுள்யு.,' நிறுவனம், அதன் '5 சீரிஸ்' வரிசையை புதுப்பித்து, உலக
சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசை கார்கள், பெட்ரோல், டீசல்,
ஹைபிரிட் உட்பட மின்சார வகையிலும் வருகின்றன.
தற்போது இருக்கும், 5
சீரிஸ் கார்களை விட இந்த புதிய கார்களின் உருவம் பிரமாண்டமாக காட்சி
அளிக்கிறது. அதன், தனித்தன்மையான முன்புற கிரில், ஸ்போர்ட்டி முன்புற
மற்றும் பின்புற பம்பர்கள், மெல்லிசான டெயில் லைட்டுகள் ஆகியவை காரின் அழகை
மேலும் மெருகூட்டுகிறது.
உட்புறத்தை பொறுத்த வரையில், '3 சீரிஸ்'
கார்களைப் போன்ற அதே, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்,
14.9 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், உட்புற இடம் அதிகரிப்பு உட்பட பல
ஆடம்பர வசதிகளை கொண்டுள்ளது இந்த கார்.
இந்தியாவில் வெற்றிகரமாக
இயங்கி வரும் பி.எம்.டபுள்யு., 5 சீரிஸ் வரிசையின் அடுத்த தலைமுறை கார்கள்
விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.