வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதித்து வருகிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் ஸ்டான்போர்டு பல்கலையில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் பேசுகையில், பார்லிமென்டில், செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட்.
உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். மக்களை அச்சுறுத்தி வரும் பா.ஜ., விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதித்து வருகிறார். அதே நேரத்தில் நமது பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணத்தின் போது கிட்டத்தட்ட 24 பிரதமர்கள் மற்றும் உலக தலைவர்களை சந்தித்து, இந்தியா வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். 'பிரதமர் மோடி தான் பாஸ்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியதை, ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் ராகுல் வெளிநாட்டு பயணத்தின் போது, இந்தியாவை அவமதித்து பேசினார். இந்த விவகாரம் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடியாமல், அவை நேரம் வீணடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்ககது.