வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை: அண்ணாமலை
வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை: அண்ணாமலை

வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை: அண்ணாமலை

Added : மே 31, 2023 | கருத்துகள் (26) | |
Advertisement
மதுரை: 'மல்யுத்த வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை. அமைச்சரை கைது செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரையில் தமிழக பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக மதுரை விமான நிலையம் வந்த மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரிமியர்
Allegations made by players need proof: Annamalai  வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: 'மல்யுத்த வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை. அமைச்சரை கைது செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



மதுரையில் தமிழக பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக மதுரை விமான நிலையம் வந்த மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரிமியர் லீக் தொடரில் திராவிட மாடல், குஜராத் மாடலை தோற்கடித்ததாக கூறுகின்றனர்.


அப்படியெனில் தமிழர்களே இல்லாத சென்னை அணி, 3 தமிழர்களை கொண்ட குஜராத் அணியை வீழ்த்தியதற்காக திமுக.,வினர் பெருமை பெற்றுக்கொள்வார்களா? சென்னை அணியை குஜராத்தை சேர்ந்த பா.ஜ.,காரர் ஜடேஜா தான் வெற்றிப்பெற வைத்துள்ளார். அதேதான் 2024ல் நடக்கும் தேர்தலிலும் பா.ஜ.,வினர் தான் வெற்றியை தமிழகத்தில் பெறப்போகிறார்கள்.


மல்யுத்த வீராங்கனைகள் அளிக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் தேவை. புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்துவரும் சூழலில் அமைச்சரை கைது செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பேச்சுவார்த்தைக்கு வராமல் மல்யத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடரக்கூடாது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா?



நடைபயணம்


ஜூலை 9ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணம் துவக்க உள்ளேன். இதற்காக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பயணம் குறித்த விவரங்களை தெரிவிக்க உள்ளேன். இதில் தேசிய தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். வருமான வரித்துறையினர் மீது திமுக.,வினர் நடத்திய தாக்குதல் அத்துமீறிய செயல். உலகிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா உள்ளது. அதற்கு காரணம் பிரதமர் மோடி. அதனை பயன்படுத்தி தமிழகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (26)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
31-மே-202318:54:29 IST Report Abuse
தாமரை மலர்கிறது பிரிஜ் பூஷன் மிகவும் தேசப்பற்று கொண்டவர். நாட்டிற்காக உயிரை கூட கொடுப்பார். எந்த வேலையும் செய்யாமல் இந்த வீராங்கனைகள் இந்தியர்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்தியாவிற்கு அவப்பெயர் வாங்கித்தர உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராடுகிறார்கள். பதக்கங்களை கங்கையில் தூக்கிபோடுவோம் என்று அரசையே மிரட்டுகிறார்கள். வெளிநாட்டு சதி இருக்க வாய்ப்புள்ளது. இவர்களின் பதக்கங்களை பிடுங்கி, குண்டர் சட்டத்தில் இவர்களை ஜெயில்இல் போடுவது நாட்டிற்கு நல்லது.
Rate this:
Cancel
k.sarthar - Tamilnadu Ramanathapuram,இந்தியா
31-மே-202318:15:03 IST Report Abuse
k.sarthar அண்ணாமலை நடைப்பயணத்தில் நானும் கலந்துகொள்வேன் என்னுடைய பயறும் பதிவாகிவிட்டது என் மண் என் மக்கள்website
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
31-மே-202316:14:17 IST Report Abuse
மனிதன் நம் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த, விளையாட்டு வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவனுக்காக வக்காலத்துவாங்கும் நினைத்தால் கேவலமாக இருக்கிறது... பெண்கள் என்றால் போகப்பொருள் என்பது மட்டும்தான் இவர்களது என்னமோ என எண்ணத்தோன்றுகிறது...அந்த கயவனை பதவியைவிட்டு தூக்கி கைது செய்யுங்கள் என்று இங்கே ஒருவராவது பதிவு செய்திருக்கிறார்களா??? தான் சார்ந்த கட்சிக்காக எத்தனை பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்? ஒருவராவது எனது கட்சியே ஆனாலும் இது தவறு என்று கூறுகிறார்களா??? இவர்கள் இப்படித்தான் இவர்களை புரிந்துகொள்ள இதெல்லாம் ஒரு வாய்ப்பு..... நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டால், பழங்குடியினர் தீவிரவாதிகள்...,விவசாயிகள் தீவிரவாதிகள்..., விளையாட்டு வீரர்கள் தீவிரவாதிகள்..., எதிர்க்கட்சிகள் தீவிரவாதிகள்.., கேள்விகேட்கும் பத்திரிக்கை மற்றும் ஊடவியலாளர்கள் தீவிரவாதிகள்...சரி யார்தாண்டா நல்லவர்கள்? இத்தனை அநியாயங்களையும் செய்துகொண்டிருக்கும் நீங்களா??? உங்களுக்கு நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்...
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
31-மே-202320:02:42 IST Report Abuse
vadiveluஎங்க , அவிங்க கோர்ட்டுக்கு போக மாட்டேன் உஎன்கிறார்கள், வெட்கமாக இல்லை, நீங்கதான் வக்காலத்து வாங்குற்றீங்க. எத்தனை பெரிய சட்ட மேதைகள் நம்ம நாட்டில் இருக்காங்க, அவிங்களில் ஒருத்தர் கூட இவங்க கண்ணில் படலையா.உங்க பக்கத்துக்கு வீட்ட பெண்மணி உங்களை பற்றி புகார் சொன்னால் உடனே போலீஸ் உங்களை கைது செய்யலாமே.ஆதாரம் வேண்டாமா.வைரமுத்து மேல் எத்தனை புகார் இடுக்கு, அவரை கைதா செய்தார்கள்.உறுதுவதை விட்டு ஒழியுங்கள்....
Rate this:
Perumal - London,யுனைடெட் கிங்டம்
31-மே-202320:11:38 IST Report Abuse
PerumalThey Gave compliant against Union Minister, If they got evidence they should provide even to medias, With evidence former US president Mr Trump only punished by Court, This case wants to destroy BJP and Its Ministers name among the public,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X