புதுடில்லி: ஓடிடியில் புகையிலை எதிர்ப்பு விளம்பரம் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இன்று(மே 31) உலக புகையிலை எதிர்ப்பு தினம்.
இந்நிலையில், இன்று(மே31) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஓடிடியில் புகையிலை எதிர்ப்பு விளம்பரம் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும். இதை தவறினால், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.