'மெக்லரென்' நிறுவனம், அதன் 'ஆர்டூரா' என்ற ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ்
காரை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. இது, இந்நிறுவனத்தின் வி - 6 இன்ஜின்
கொண்ட முதல் காராகவும், மூன்றாம் ஹைபிரிட் காராகவும் விளங்குகிறது.
இந்த
கார், மெக்லரென் நிறுவனத்தின், பிரத்யேக குறைந்த எடை கார்பன் கட்டமைபுடன்
உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் மற்றும் சஸ்பென்ஷன்களை பாதுகாக்க,
கார்பன் பைபரூடன் கூடிய அலுமினியம் கிராஷ் பீம் என்ற கவசம்
வழங்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் வகை காரான இதில், 7.4 கி.வாட்., பேட்டரி
உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியின் மூலம், 130 கி.மீ.,
வேகத்தில், 31 கி.மீ., வரை பயணிக்க முடியும். அத்துடன், காரின் ஹெட்
லைட்டுகளில் இந்நிறுவனத்தின் விசேஷ அடையாளம், 19 மற்றும் 20 அங்குல அலாய்
சக்கரங்கள், 8 அங்குல டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள்
கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு அட்டோ இணைப்பு, டூயல் ஜோன் கிளைமேட்
கன்ட்ரோல் என பல அம்சங்கள் நிறைந்த காராக காணப்படுகிறது.
ஹார்ஸ் பவர் 686 பி.எஸ்.,டார்க் 720 என்.எம்.,டாப் ஸ்பீடு 330 கி.மீ.,(0 -100 கி.மீ.,) பிக்., அப் 3 நொடிகள்
ஹார்ஸ் பவர் 686 பி.எஸ்.,டார்க் 720 என்.எம்.,டாப் ஸ்பீடு 330 கி.மீ.,(0 -100 கி.மீ.,) பிக்., அப் 3 நொடிகள்