'ஆஸ்டன் மார்ட்டின்' நிறுவனம், அதன் 'டி.பி.,-12' ஸ்போர்ட்ஸ் காரை
இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது. இந்த கார், 'டி.பி., - 11' காருக்கு
அடுத்த தலைமுறை காராகும்.
கம்பீரமான முன்புற கிரில், மிகப்பெரிய 21
அங்குல அலாய் சக்கரங்கள், காற்றை கிழித்துச் செல்லும் வகையில்
ஸ்போர்ட்டியான டிசைன் ஆகியவை காரின் ஆக்ரோஷ உடல் வாகை சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக இதில், வலிமையான 'மெர்சிடிஸ் - ஏ.எம்.ஜி.,' பிராண்டின் 4
லிட்டர், வி - 8 இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
இதன், மறு
வடிவமைப்பு செய்யப்பட்ட முன்புற ஹெட் லைட்டுகளில், பிரத்யேகமான 'எல்.இ.டி.,
மேட்ரிக்ஸ்' தொழில்நுட்பம் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், நவீன ஹை
ரெசல்யூஷன் 10.25 அங்குல டச் ஸ்கிரீன் சிஸ்டம், 'நீர் வீழ்ச்சி' போல
இருக்கும் டேஷ் போர்டு அமைப்பு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு
ஆட்டோ, 4ஜி நேவிகேஷன் உள்ளிட்டவை, காரின் பிரமாண்ட அம்சங்களை
பிரதிபலிக்கின்றன.
ஹார்ஸ் பவர் 686 பி.எஸ்.,டார்க் 800 என்.எம்.,டாப் ஸ்பீடு 325 கி.மீ.,(0 - 100 கி.மீ.,) பிக்., அப் 3.6 நொடிகள்
ஹார்ஸ் பவர் 686 பி.எஸ்.,டார்க் 800 என்.எம்.,டாப் ஸ்பீடு 325 கி.மீ.,(0 - 100 கி.மீ.,) பிக்., அப் 3.6 நொடிகள்