பி.டி.எஸ்., ஆர்மிக்கான கொண்டாட்ட நேரம் இது. கொரிய பாப் இசைக் குழுவான பி.டி.எஸ்., துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி மே 31 துவங்கி ஜூன் 17 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டேக் டூ (Take Two) என்ற பாடலையும் வெளியிடுகின்றனர். இதனால் பி.டி.எஸ்., கம் பேக் என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பி.டி.எஸ்., தென் கொரிய இசைக் குழுவுக்கு அனைத்து கண்டங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. நம்மூர் தமிழ்நாட்டிலேயே இன்ஸ்டா, பேஸ்புக் பையோவில் பி.டி.எஸ்., ஆர்மி என போட்டுக்கொண்டு வலம் வரும் இளசுகள் ஏராளம். பி.டி.எஸ்., ஆர்மி என போட்டுக்கொள்வதால் தங்களை தனித்துவமாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த பி.டி.எஸ்., 7 ஆண்களைக் கொண்ட குழு 2013 ஜூன் 13ல் இசை நிகழ்ச்சிகளை நடத்த துவங்கியது. இணையம் மற்றும் சர்வதேச மேடைகளில் லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
![]()
|
![]()
|
அதிலும் புதுமையைப் புகுத்தியுள்ளனர் பர்பிள் பாய்ஸ். போர்ட் கேம் வடிவில் நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துள்ளனர். கோ என்று துவங்கும் அந்த கேம் போர்ட்டில் மே 31 என்ற கட்டம் கேள்வி குறியுடன் உள்ளது. அடுத்து ஜூன் 2 கட்டத்தில் கான்சர்ட்டை குறிக்கும் படம், ஜூன் 3ல் வீடியோ நிகழ்ச்சியை குறிக்கும் படம்... இவ்வாறு ஒவ்வொரு கட்டத்தில் குறிப்பால் உணர்த்தும் படங்களை வெளியிட்டுள்ளனர். அதனை பி.டி.எஸ்., ஆர்மியினர் டீகோட் செய்து வருகின்றனர்.
பி.டி.எஸ்., குழுவினர் பல பாடல்கள் நூறு கோடி பார்வைகளை யுடியூபில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமி விருது நாமினேஷன் வரை இவர்களது பாடல்கள் சென்றன. ஏராளமான சர்வதேச விருதுகளையும் குவித்துள்ளனர். அதை எல்லாம் பி.டி.எஸ்., ஆர்மியினர் காட்டும் அன்பு தான் தங்களுக்கான சிறந்த விருது என இவர்கள் கூறுகின்றனர்.