நீர்பெயர் கிராம சாலையை சீரமைக்க வேண்டுகோள்
சித்தாமூர் அருகே உள்ள நீர்பெயர் கிராமத்தின் குளக்கரையில் உள்ள வளைவுப்பகுதியில், சாலையில் பள்ளம் ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
இதனால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆகையால், ஊராட்சி நிர்வாகம், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.நரேந்திரன், நீர்பெயர் கிராமம்.
சேதமடைந்த சிறு பாலத்தை சீரமைக்க வேண்டுகோள்
சூணாம்பேடு 'சர்ச்' சாலை, எம்.வி., சாலையுடன் இணையும் சந்திப்பு அருகே, சிறு பாலம் உள்ளது.
இந்த சிறு பாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டதால், மரக்கட்டைகள் கொண்டு தற்காலிகமாக அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால், சேதமடைந்த சிறு பள்ளத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ந.ரகுபதி, சூணாம்பேடு.