திருமங்கலம்:திருமங்கலம் அருகே சாலைத் தடுப்பில் கார் மோதி தாயும், மகனும் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் ராசையா காலனியில் வசித்தவர் கார்த்திக், 23. இவரது தாயார் லட்சுமி, 43, தம்பி வினோத், 24, உறவினர்கள் நாகலட்சுமி,37, பிரவின் குமார்,16.
தங்களது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்க காரில் சென்றனர். கார்த்திக் கார் ஓட்டினார்.
நேற்று முன் தினம் அதிகாலை மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் கரிசல்பட்டி மேம்பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் ஐந்து பேரும் காயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார்த்திக், லட்சுமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.