வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆசியா என. வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பங்குதாரர்களாக செயல்படுமாறு, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அழைப்பு விட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமையிலான குழுவினர், கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
|
இந்த பயணத்தின் போது ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் கூறியது, வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக இருந்தது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய, சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்கள் முனைப்புடன் உள்ளன. ஜப்பான் நிறுவனங்களின் ரூ. 3,231 கோடி மதிப்புள்ள முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாயப்பு கிடைக்கும்.
2024 ஜனவரி 10,11 ம் தேதி தமிழகத்தில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். எனது அழைப்பை சிங்கப்பூர், ஜப்பான் தொழிலதிபர்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.
ஆசியாவின் உற்பத்தி தொழில் மையமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.