''வேலைக்கு வராதவங்க பெயரையும் கணக்குல காட்டி, பணத்தை, 'ஆட்டைய' போடுதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.
''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சியில, 100 நாள் வேலை திட்டத்துல, பணிக்கு வராதவங்க பெயரை சேர்த்து கணக்கு காட்டி, சில வார்டு கவுன்சிலர்கள், 'கல்லா' கட்டுதாவ...
![]()
|
''இது சம்பந்தமா மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வரை புகார் சொல்லியும், யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க... இதனால, தெம்பான கவுன்சிலர்கள், இப்ப தேயிலை தோட்டத்துல வேலை செய்யுற பெண்கள் பெயருலயும் போலி கணக்கு காட்டி, வருமானத்தை, 'டபுள்' ஆகிட்டாவ வே...
''இந்த மோசடி குறித்து, முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் போயிட்டு... ஊராட்சி முழுக்க இந்த நிலை தொடர்வதால், விரைவில் விசாரணை இருக்குதாம் வே...'' என்றார் அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement