எண்ணுார் துறைமுகம் அருகே கனரக பொறியியல் தொழில் பூங்கா
எண்ணுார் துறைமுகம் அருகே கனரக பொறியியல் தொழில் பூங்கா

எண்ணுார் துறைமுகம் அருகே கனரக பொறியியல் தொழில் பூங்கா

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், 655 ஏக்கரில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக்கையை, 'டிட்கோ' நிறுவனம் தயாரிக்க உள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டூர் மற்றும் எப்ரஹாம்புரம் கிராமங்களில், 655 ஏக்கரில், 700 கோடி ரூபாய் செலவில் கனரக பொறியியல்
Heavy Engineering Industrial Park near Ennuar Port   எண்ணுார் துறைமுகம் அருகே கனரக பொறியியல் தொழில் பூங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், 655 ஏக்கரில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக்கையை, 'டிட்கோ' நிறுவனம் தயாரிக்க உள்ளது.


இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டூர் மற்றும் எப்ரஹாம்புரம் கிராமங்களில், 655 ஏக்கரில், 700 கோடி ரூபாய் செலவில் கனரக பொறியியல் தொழில் பூங்காவை டிட்கோ நிறுவனம் உருவாக்க உள்ளது.

இது தொடர்பாக, 2017ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், அப்போது போதிய நிலம் இல்லாதது உட்பட, பல்வேறு சூழல்களால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.


latest tamil news


தற்போது, நிலம் கையகப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எண்ணுார் துறைமுகம் அருகே, இந்த பூங்கா அமைவதால், கனரக தொழிற்சாலைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். தற்போது, தொழில்துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. சந்தை நிலவரமும் மாறி உள்ளது. எனவே, கனரக தொழிற்சாலைகளின் தற்போதைய சூழல் குறித்து விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளோம்.

அதில், கப்பல் கட்டும் தொழிலுக்கான ஆதரவு தொழில் நிறுவனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த தொழில், மின்சாரம் மற்றும் வாகன உப பொருட்கள் மற்றும் பிற பொறியியல் தொழில் சார்ந்த துறைகள் இடம் பெறலாம். அத்துடன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

01-ஜூன்-202314:39:58 IST Report Abuse
சூரியா எல்லா வேலைகளும் முடிந்து, தொழிற்சாலை ஆரம்பிக்கும்வரை வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல, சுற்றுச் சூழல் பாதிப்பு, மீன் வளம் கெட்டுவிட்டது என்று வைகோ முதலானவர்கள் ஆரம்பித்து, கட்டிங் கேட்கத் தொடங்குவார்கள். தொல்லையின் எல்லை மீறுகையில், தொழிற்சாலைகள், கட்டிங்கை நிறுத்துவார்கள். பிறகென்ன! தூத்துக்குடிதான்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஜூன்-202304:49:03 IST Report Abuse
Kasimani Baskaran அனைத்தும் சென்னையைச்சுற்றியே அமைவது சென்னையில் மேலும் ஜனத்தொகையையும் மாசடைவதும் அதிகரிக்கச்செய்யும். சென்னையை விட்டு வெளியே கிழக்குக்கடற்கறை சாலையை ஒட்டிய பகுதியை பயன்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கலாம்.
Rate this:
01-ஜூன்-202307:05:22 IST Report Abuse
ராஜாஏன் ECR ஒழுங்காக இருப்பது பிடிக்கவில்லையா!? ஏற்கனவே G-Square வந்து ஆக்கிரமிப்பு செய்து விட்டது. கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கும்பகோணம், விருதுநகர், இராமநாதபுரம் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிய வேண்டாமா? அந்த பகுதிகள் இன்னும் முன்னேற வேண்டாமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X