வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: போலீஸ் ஸ்டேஷன்களில் குற்றங்கள் தொடர்பான புள்ளி விபரங்களை குறைத்துக்காட்ட, சி.எஸ்.ஆர்., எனப்படும் புகார் மனு ஏற்பு ரசீது பதிவில் கூட இழுத்தடிப்பு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'புகார்தாரர்களுக்கு காவல் நிலையங்களில் தரப்படும், சி.எஸ்.ஆர்., எனும் பதிவு ரசீதுக்கு, சட்ட அங்கீகாரம் இல்லை. குற்றவியல் நடைமுறை மற்றும் இந்திய தண்டனை சட்டத்திலும், இதுபற்றி எதுவும் கூறப்படவில்லை' என, ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தெரிவிக்கிறார்.
ஆனால், பணியில் உள்ள, போலீஸ் அதிகாரிகள், 'கைது செய்யக்கூடிய குற்றங்கள் தவிர்த்து, பிற புகார்கள் மீது விசாரித்து, முதற்கட்டமாக சி.எஸ்.ஆர்., ரசீது வழங்குகிறோம்.
![]()
|
'புகார்தாரர் மற்றும் எதிர் தரப்பினர், உடனடியாக தீர்த்துக்கொள்ளக்கூடிய மனக் கசப்பான நிகழ்வுகளுக்கு, நீதிமன்றம், வாய்தா, வழக்கு என, அலைய வேண்டி இருக்கும்.
'இதனால் தான், சி.எஸ்.ஆர்., பதிவு செய்கிறோம். எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், பாதிக்கப்பட்டவர் நியாயம் கிடைக்க, வழக்கு போட்டு காத்திருக்க வேண்டும். இரு தரப்பினரிடமும் வன்மம் தலைதுாக்கும். இது மேலும் பல குற்றங்களுக்கு அடித்தளமாகிவிடும்.
'மேலும், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என, விசாரிக்க வேண்டும். அதற்காகவும், சி.எஸ்.ஆர்., பதிவு செய்கிறோம்' என்கின்றனர்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசேகரன் என்பவர் கூறியதாவது:காவல் துறையில், சி.எஸ்.ஆர்., நடைமுறையை பின்பற்றுகின்றனர்.
போலீசார் பதிவு செய்யும், முதல் தகவல் அறிக்கைக்கு தரப்படும் முக்கியத்துவம், சி.எஸ்.ஆர்., பதிவுக்கு தருவது இல்லை. மொபைல் போன் தொலைந்தாலோ அல்லது திருடு போனது பற்றியோ புகார் அளித்தால், சி.எஸ்.ஆர்., பதிவு ரசீது கிடைக்க, போலீசார் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது அலைக்கழிக்கின்றனர்.
தற்போதுள்ள, பிரச்னையே புகார்கள் மீது, சி.எஸ்.ஆர்., பதிவு ரசீது கூட போலீசார் தருவது இல்லை என்பது தான். குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களை குறைத்து காட்டவும். பல நாட்கள் அலைக்கழித்து, வசூல் வேட்டை நடத்தவும், இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement