வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
டுவிட்டர் பக்கங்கள் ஒரே நாளில் முடக்கப்பட்டதால் அவரது கட்சியினர் காரணம் தெரியாமல் திகைத்து போயுள்ளனர். ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமான், டுவிட்டரில் புதிய கணக்கு ஒன்றை துவங்கி உள்ளார். சிறிது நேரத்திலேயே 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை பின் தொடர துவங்கினர்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரின் டுவிட்டர் பக்கம் முடக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் மறுப்பு
இது தொடர்பாக சென்னை போலீஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: நாம் தமிழர் கட்சி சமூக ஊடகங்களை முடக்க வேண்டும் என சென்னை போலீஸ் சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் சென்னை போலீசை தொடர்புப்படுத்தி தவறான செய்தியை பரப்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறப்பட்டு உள்ளது.