பங்குச்சந்தையில் மீண்டும் எழுச்சி கண்டுள்ள அதானி குழுமம், மூலதன செலவுகளை சமாளிக்க பங்குகள் விற்பனை வாயிலாக சுமார் 3.5 பில்லியன் டாலர் நிதியை திரட்ட உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் அறிக்கையை தொடர்ந்து, பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. நெருக்கடியான சூழலில், பங்குகள் வெளியீடு வாயிலாக ரூ.20,000 கோடி திரட்டுவதை திரும்ப பெறுவதாக அதானி குழுமம் அறிவித்தது. சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள், தற்போது மீண்டும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை
எழுச்சி கண்டு வருகிறது.
இந்நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்குகள் விற்பனை வாயிலாக 2.5 பில்லியன், (ரூ.21,000 கோடி) திரட்ட அதானி குழும நிர்வாக ரீதியாக ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் விற்பனை வாயிலாக 1 பில்லியன் டாலர் திரட்ட முடிவு செய்துள்ளது.
நிர்வாக ஒப்புதல்கள் பெற்ற அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் ஆகியவை பங்குதாரர்களின் ஒப்புதலைக் கோரியுள்ளன.
அதானி எனர்ஜி நிர்வாக குழு, ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் கூடி, நிதி திரட்ட ஒப்புதல் வழங்கவுள்ளது.
![]()
|
மூலதனச் செலவுத் தேவைகளுக்கு திரட்டப்படும் இந்த 3.5 பில்லியன் டாலர் நிதி திரட்டும் பணி, நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டிற்குள் முடிவடையுமென எதிர்ப்பார்க்கபடுகிறது.
தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை வழங்குவதன் மூலம் நிதி திரட்டப்படும். ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கில் உள்ள முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள முதலீட்டாளர்களுடன், மேலும் சில புதிய முதலீட்டாளர்களும் இணையலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மார்ச் முதல் வாரத்தில் அதானி குழுமத்துக்கு சொந்தமான 4 நிறுவன பங்குகளில் 1.87 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள அமெரிக்காவை சேர்ந்த ஜி.கியூ.ஜி பார்ட்னர்ஸ்,
மீண்டும் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.