வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
3 பெட்டிகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. உயிர்ச்சதேம் ஏதும் இல்லை . ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதா அல்லது விபத்தா என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இதே ரயிலில் தான் 3 பேரை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவமும் நடந்தது.
பெட்ரோல் டேங்கர் ரயில் தப்பியது
கேரளாவில் கண்ணூர் அருகே ஆலப்புழா ரயில்தீ பற்றி எரிந்த ரயில்வே கோச்சின் அருகே 100 மீட்டர் தொலைவில் பாரத் பெட்ரோலியம் எரிபொருள் ஏற்றி வந்த ரயிலும் நின்று கொண்டிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த ரயில் தப்பியது. இதில் தீ பற்றி இருந்தால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும். தற்போது சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு படையினர் கேரள போலீசிடம் அறிக்கை கேட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 3 பெட்டிகள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement