மதுரை: மதுரை தியாகராஜர் கல்லூரிகளின் தாளாளராக இருந்து கல்விப் பணிகள் செய்தவரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராகவும் இருந்த கருமுத்து கண்ணன் கடந்த மே 23ம் தேதி காலமானார்.
இந்நிலையில், கருமுத்து கண்ணன் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் அவரது மறைவிற்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்தார். இதையடுத்து கருமுத்து கண்ணன் உருவப் படத்திற்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement