புதுடில்லி : ஆவணமின்றி ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவது தொடர்பான வழக்கை அவரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ரூ.2 ஆயிரம் நோட்டை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. இதையடுத்து வரும் செப்.,30 ம் தேதி வரை வங்கிகளில் மாற்றி கொள்ள அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம் என்ற அறிவிப்பை எதிர்த்த வழக்கு டில்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை அவசராமாக விசாரிக்க கோரியதை, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.