பண்டிகைகால இனிப்புகளில் குழந்தைகளை அதிகம் கவரும் பால் இனிப்பு என்றால் அது முந்திரி கேக்தான். சுவையுடன் ஆரோக்கியமும் கொண்ட இனிப்புப் பொருள் என்றால் முந்திரி கேக். பேக்கரியில் விற்கப்படும் பஞ்சு போன்ற வைரக்கல் வடிவ முந்திரி கேக்கை வீட்டிலேயே எளிமையாகச் செய்யலாம். எளிய முறையில் தயாரிக்க ஏற்ற முந்திரி கேக் ரெசிபியைக் காணலாம்.
முந்திரி - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், தண்ணீர் - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு, குங்குமப்பு+ - ஒரு சிட்டிகை
![]()
|
முந்திரியை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் முந்தியை அரைத்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கேரமல் எனப்படும் பாகு வரும்வரை காய்ச்சவும். பாகு பதம் வந்தவுடன் அரைத்த முந்திரி விழுது, சிறிது சிறிதாக கொட்டி கிளறவும். இந்த கலவையில் தேவையான அளவு நெய், ஏலக்காய்ப்பொடி, சுக்கு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கலவை கெட்டியாக வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கிளறிக் கொண்டே நெய் தடவிய தட்டில் ஊற்றி சில நிமிடங்கள் காய வைக்கவும். சிறிது சூடாறியதும் வைரக்கல் வடிவத்தில் கத்தி கொண்டு வெட்டி காய வைக்கவும். பின்னர் இந்த தட்டைக் கவிழ்த்தால் சூடான முந்திரி கேக் ரெடி..!