சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற பல கலர்களில் கிடைக்கும் குடை மிளகாய்கள், பெல் பெப்பர்ஸ் மற்றும் ஸ்வீட் பெப்பர்ஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு நிறங்களில் கிடைப்பது போலவே பலவித ஆரோக்கிய நன்மைகளையும் குடை மிளகாய்கள் கொண்டுள்ளன. பல்வேறு பிரபலமான உணவுகளில் சுவையூட்ட, குடை மிளகாய்கள் சேர்க்கபப்டுகின்றன. உணவை கலர்ஃபுல்லாக மாற்றவும் உதவுகின்றது. இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பெல் பெப்பர்ஸ் பலருக்கும் தெரியாத சிறந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது
![]()
|
குடை மிளகாய்களில் நம் கண்களை பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் கரோட்டினாய்டுகளான Lutein மற்றும் zeaxanthin-கள் உள்ளன. எனவே குடை மிளகாய்களை உணவில் சேர்ப்பது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன
ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் குடை மிளகாய்களில் நிறைந்துள்ளன. இது உடலை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குடை மிளகாய்களின் ரிச்சான சிவப்பு கலருக்கு கேப்சாந்தின்(Capsanthin) தான் காரணம். கேப்சாந்தின் என்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது UVA மற்றும் UVB சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
குடை மிளகாய்களில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட பல அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், நோய் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கேன்சர் அபாயத்தை குறைக்கிறது
![]()
|
குடை மிளகாய்கள் உண்மையிலே சூப்பர்ஃபுட் ஆகும். ஏனென்றால் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் Apigenin, lupeol, luteolin, quercetin மற்றும் capsiate உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. தவிர பீட்டா-கரோட்டின், பீட்டா-கிரிப்டோக்சாந்தின் (beta-cryptoxanthin) மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகளும் உள்ளன.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது
குடை மிளகாயில் லைகோபீன், வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுப்பதன் மூலம் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குடை மிளகாய்களில் இருக்கும் ஏராளமான வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் Homocysteine-ன் லெவலை குறைத்து இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.