இந்தியன் ஹாட் திருவிழா சென்னை என்ற பெயரில் ஜூன் 16 முதல் 25 வரை எழும்பூரில் கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள், கைத்தறி மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ள கைவினைக் கலைஞர்களிடம் இருந்து படைப்புகளைப் பெற்று அதனை காட்சிப்படுத்த உள்ளனர்.
![]()
|
கலை மற்றும் கலாசாரம், ஆடைகள், பேஷன் ரகங்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றின் கீழ் 100 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கலைப் பொருட்கள் மீது ஆதித ஆர்வம் கொண்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பிடித்தப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
இடம்: கோஆப் டெக்ஸ் பொருட்காட்சி மைதானம், பாந்தியன் சாலை, சுலைமான் சக்காரியா அவென்யூ, சென்னை - 08.
அமைவிடத்திற்கான கூகுள் மேப்: https://goo.gl/maps/x17Rg8kDfydP1x9f6
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement