வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது என ராகுல் குற்றம் சாட்டினார். இதற்கு ராகுல் பொய் சொல்கிறார் என பாஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்.

ராகுல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் ‛ஸ்டார்ட் அப் ' தொழில் முனைவோர்களுடன் ராகுல் உரையாற்றினார். பின்னர் ராகுல் பேசுகையில்,எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றுநான் கருதுகிறேன்.
ஒரு தேசத்திற்கான தனிநபர்களுக்கான தனியுரிமை தகவல் குறித்த கொள்கைகளை நீங்கள் நிறுவ வேண்டும். அப்போது விளையாட்டாக தனது ஐபோனை எடுத்து, ‛ஹலோ மிஸ்டர் மோடி...' என்றார்.
ஒரு நாட்டின் அரசு, உங்களுடைய போனை ஒட்டுக்கேட்க விரும்பினால் யாரும் உங்களை தடுக்க முடியாது. இது என்னுடைய எண்ணம். ஒரு நாடு உங்கள் போனை ஒட்டுக் கேட்க விரும்பும் போது, அது சண்டையிடுவதற்கான சரியான களம் இல்லை. நான் என்ன வேலைகள் எல்லாம் செய்கிறேன் என்று தெரிந்து கொள்ள அரசு விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.
இதற்கு பதிலளித்து பாஜ.,செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
மத்திய அரசு தனது போனை ஒட்டுக்கேட்பதாக ராகுல் பொய் சொல்கிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவமதிப்பு குற்றச்சாட்டுகளை ராகுல் முன் வைத்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக் கண்டு ராகுல் இது போன்று கூறி வருகிறார். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருடன் ராகுல் உரையாடிய போது இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து வருவதாகக் கூறியிருந்தார்.
2022-- 23 நிதியாண்டில், இந்தியா 770 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகள் நடந்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம். அமெரிக்காவில் சர்வதேச அரங்கில் இந்தியாவை அவமதித்த ராகுலை பாஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கடுமையாக சாடியுள்ளார்.

நேற்று(மே 31) அமெரிக்கா நடந்த நிகழ்ச்சியில் போது, புதிய பார்லிமென்ட் மற்றும் புனிதமான செங்கோல் பாஜ., தலைமையிலான மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வெளிநாட்டு மண்ணில் வைத்து ராகுல் தாக்கி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.