வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரையில் ஒய்வு பெறும் நாளில் அரசு பஸ்ஸை கட்டிப்பிடித்து அழும் டிரைவரின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

டிரைவர் முத்துப்பாண்டி கூறியதாவது: நான் முப்பது ஆண்டு டிரைவராக பணிபுரிந்து இன்றுடன் ஓய்வு பெற்றேன். இந்த வேலை கிடைத்துதான் எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு குடும்பமும் இந்த தொழிலும் எனக்கு மிகுந்த பெருமையை அளித்தது. அதற்கு நன்றி கடனாக, பஸ் ஸ்டேரிங், படி மற்றும் பஸ் முன்னால் நின்று முத்தமித்து கட்டி அணைத்து அழுததாக தெரிவித்தார்.
