நத்தம் அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்
நத்தம் அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்

நத்தம் அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்

Added : ஜூன் 01, 2023 | |
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. திருமணிமுத்தாற்றின் தென்கரையில் பிரகார மண்டபங்களுடன் பெரிய மதில் சுவரும் 14 கால் மண்டபமும் கருப்பணசாமி பிடாரியம்மன் தென்புறத்தில் பகவதி அம்மன் ஆகிய கோயில்களை அடங்கிய திருக்கோவிலாக அமைந்துள்ளது. 1999-ல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
Vaikasi Visakha Festival Chariot at the thousand year old Kailasanathar Temple near Natham  நத்தம் அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. திருமணிமுத்தாற்றின் தென்கரையில் பிரகார மண்டபங்களுடன் பெரிய மதில் சுவரும் 14 கால் மண்டபமும் கருப்பணசாமி பிடாரியம்மன் தென்புறத்தில் பகவதி அம்மன் ஆகிய கோயில்களை அடங்கிய திருக்கோவிலாக அமைந்துள்ளது.


1999-ல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கைலாசநாதர் வைகாசி விசாகப் பெருந்திருவிழா ஆரம்பிப்பதற்கு முன் ஊர்காவல் தெய்வமாகிய திருக்கோவிலைச் சார்ந்த பிடாரியம்மன் கோவிலுக்கு 9 நாட்கள் விசேஷமாக திருநாள் நடத்தப்பட்டு அதன் பின்னர் விசாகத்தை அனுசரித்து மேற்படி திருக்கோவிலில் காப்பு கட்டு விழா நடைபெற்றது.


கொடியேற்றம் நடத்தி வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது முதல் தினமும் காலை மாலை இரு வேலைகளில் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது. நேற்று கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று சிறப்பு வாய்ந்த செண்பகவல்லி அம்மன் கைலாசநாதர் சுவாமி தேரோட்டம் சிறப்பாக ஆர்மபிக்கப்பட்டது. இதில் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து ஊர்வலமாகச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X