மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில், ஸ்ரீனிவாச பெருமாள் கருட சேவை, வரசித்தி விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா, இன்று நடைபெற உள்ளது.
ராமாபுரம் கிராமத்தில், 45ம் ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழாவில், காலை 6:00 மணிக்கு சேவல் கொடி உயர்த்துதல், 9:00 மணிக்கு பால் காவடி, வேல் காவடி, புஷ்பக காவடி என, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
புஷ்ப அலங்காரத்தில், சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும் நடக்கும்.
பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், விநாயகர், சுப்ரமணியர், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.