கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
அதன் அருகில், நெல்லிக்குப்பம் சாலையில், அனுமதி பெறாமல் தனி நபர் ஒருவர், பல மாடி கட்டடங்களை கட்டி வருகிறார். எனவே, இதை தடுத்து நிறுத்த வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், தனி நபர் ஒருவர் கட்டடம் கட்டி வருகிறார். இந்த கட்டடத்திற்கு, முறையாக அனுமதி பெறவில்லை.
மேலும், சாலை மற்றும் மழை நீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து, கட்டடங்களை கட்டி வருகிறார். இது குறித்து புகார் தெரிவித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அத்துமீறி நடந்து வரும், தனியார் கட்டட கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.