வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம், பலமு மாவட்டம், மனாடு காவல் நிலையத்துக்குட்பட்ட, கிலா கிராமத்தைச் சேர்ந்தவர், சனோஜ் குமார் சிங். இவருக்கும், லெஸ்லிகஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, துர்க்கடி பகுதியில் வசிக்கும், பிரியங்கா குமாரி என்பவருக்கும், கடந்த மாதம், 10ம் தேதி திருமணம் நடந்தது.

பிரியங்கா குமாரி, 2012ம் ஆண்டு முதல், துர்க்கடி கிராமத்தைச் சேர்ந்த, ஜிதேந்திரா விஸ்வகர்மா என்பவரை, காதலித்து வந்துள்ளார்.
இவர்களது, திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இச்சூழலில், திருமணத்துக்கு பின்பும், தனது காதலன் ஜிதேந்திராவை மறக்க முடியாததால், அவருடன், மொபைல் போனில் பிரியங்கா குமாரி தொடர்ந்து, பேசி வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், இருவரும், வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள, முடிவு செய்தனர். அதன்படி, கிலா கிராமத்துக்கு சென்ற, ஜிதேந்திரா விஸ்வர்கமா, அங்கிருந்து, பிரியங்கா குமாரியை அழைத்துக் கொண்டு, தப்பியோடினார்.
இருவரையும், பிடித்து வைத்து கொண்ட ஊர்மக்கள், பெண்ணின் கணவரான, சனோஜ் குமார் சிங்கிற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு, சென்ற அவர், எதுவும் பேசாமல், தனது மனைவியை, அவரது, காதலனுடன் அனுப்பி வைத்தார்.

திருமணமான 20 நாட்களிலேயே மனைவியை அவரது காதலனுடன் கணவன் அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருள் ஆகியது. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் எதுவும் அளிக்கவில்லை.