வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் டாக்டர் ஒருவர் போதையில் ஆபரேஷன் தியேட்டரில் மயங்கி விழுந்ததால் பெண் நோயாளிகள் பரிதவித்தனர்.மயங்கிய டாக்டரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வீடியோ வரைலாகி வருகிறது.
![]()
|
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கலசா தாலுக்காவில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணா. இந்த மருத்துவமனையில் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்சிகிச்சை பெற்று வருவது வழக்கம்
இம் மருத்துவமனையில் பெண்கள் ஒன்பது பேர் கருத்தடை ஆபரேஷன்( டியூபெக்டமி அறுவை சிகிச்சை) செய்வதற்காக காலை 8 மணி அளவில்அவர்களுக்கு மயக்கமருந்து அளிக்கப்பட்டது. ஆபரேஷன் மதியம் இரண்டு மணிக்கு நடக்க இருந்தது. ஆபரேஷனை டாக்டர் பாலகிருஷ்ணன் செய்வதாக இருந்தது.
இந்நிலையில் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆபரேஷன் அறைக்கு சென்றார். ஆபரேஷன் சிகிச்சையை துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாகவே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆபரேஷன் செய்ய முடியாத நிலையில் டாக்டர் இருந்ததால் உடனடியாக டாக்டர் கொப்பா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் டாக்டரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிக்கமகளூரு மாவட்ட சுகாதார அலுவலரான டாக்டர் உமேஷ் உத்தரவிட்டார்.
![]()
|
டாக்டர் பாலகிருஷ்ணன் ஏற்கனவே கடந்த காலங்களிலும் பணிநேரத்தில் குடிபோதையில் இருந்துள்ளதாக புகாருக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.