வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மே மாத யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை ரூ.14.89 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எளிதாக பணம் பெறுவதற்கும், செலுத்துவதற்கும் மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. ..
இந்நிலையில் என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் கடந்த மே மாதத்தில் ரூ.14.89 லட்சம் கோடி மதிப்பிலான 941 கோடி யு.பி.ஐ., பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு சாதனை ஆகும். இந்தநிதியாண்டில் மட்டும் யு.பி.ஐ,, பண பரிவர்த்தனை வளர்ச்சி 43 சதவீதம் ஆகும். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.