வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வரம்: நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி- 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.எப்.சி., ரக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அக்னி- 1 ஏவுகணை சோதனை இன்று ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் அப்துல்கலாம் ஏவு தளத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது. இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.