பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிஷப்: பதவி விலகினார்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிஷப்: பதவி விலகினார்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிஷப்: பதவி விலகினார்

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
திருவனந்தபுரம் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக பாலியல் புகாரில் சிக்கிய, கேரளாவைச் சேர்ந்த பிஷப் பிரான்கோ முலக்கல், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பிஷப் பதவியை ராஜினாமா செய்தார்.கேரளாவைச் சேர்ந்த பிரான்கோ முலக்கல், ஜலந்தரின் பிஷப்பாக இருந்தார். கேரளாவுக்கு வந்தபோது, தன்னை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார்
Bishop caught in sex controversy: resigns   பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிஷப்: பதவி விலகினார்


திருவனந்தபுரம் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக பாலியல் புகாரில் சிக்கிய, கேரளாவைச் சேர்ந்த பிஷப் பிரான்கோ முலக்கல், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பிஷப் பதவியை ராஜினாமா செய்தார்.

கேரளாவைச் சேர்ந்த பிரான்கோ முலக்கல், ஜலந்தரின் பிஷப்பாக இருந்தார்.

கேரளாவுக்கு வந்தபோது, தன்னை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, பிஷப் பதவியில் இருந்து, 2018ல் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.


latest tamil news


இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், பிஷப் முலக்கல் நிரபராதி என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, அந்த கன்னியாஸ்திரி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஜனவரியில் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பிரான்சிஸை, முலக்கல் நேரில் சந்தித்தார்.

அப்போது, ஜலந்தருக்கு புதிய பிஷப் நியமிக்கும் வகையில், தன் பதவியை ராஜினாமா செய்யும்படி அவர் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜலந்தர் பிஷப் பதவியை முலக்கல் நேற்று ராஜினாமா செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (7)

சீனி - Bangalore,இந்தியா
02-ஜூன்-202307:11:57 IST Report Abuse
சீனி கிருத்துவ உலகத்துக்கு நல்ல செய்தி. இனி பெண்களை கன்னியஸ்திரி போன்ற தன்னலமற்ற சேவைக்கு நம்பி அனுப்புவார்கள். மற்ற மதத்தினர் கிருத்துவர்களுக்கு எதிரானவர்கள் என்ற போர்வையை உண்டாக்கி எதிர்கட்சிகள் உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர். ஆனால், கிருத்துவர்கள் தைரியமாக கேட்க முடியாத பிரச்சனைகளை எதிர்த்து மற்ற மதத்தினர் போராடி, உண்மைக்கிருத்துவர்களுக்கு எப்பவும் உதவியாக இருப்போம், அதன் பலன் தான் மூலக்கல் ராஜினாமா. இந்திய தண்டனைச்சட்டப்படி மதத்தை பரப்புவது குற்றமாகும், சட்டவிரோதம், எனவே உபி மாதிரி தமிழகத்தில், பைபிளை வைத்து பணம் சம்பாதிக்கவேண்டும் சுயலாபத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட சட்டவிரோதமாக இயங்கும் சர்ச்களை எப்ப இடிக்க ஜப்பானிலிருந்து புல்டோசர்கள் வரும்? எப்ப ஜார்ஜ் பொன்னைய்யா பட்டத்துல இருந்து இறங்குவாரு ?
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
02-ஜூன்-202309:05:02 IST Report Abuse
Rajaசீனி அவர்களே. இந்திய தண்டனை சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் மதத்தை பரப்புவது குற்றம் என்று தயவு செய்து சொல்லுங்கள். ஒரு புதிய தகவலை நீங்கள் கூறியுள்ளீர்கள். பலருக்கும் அது உபயோகமாக இருக்கும்....
Rate this:
Cancel
கால் தடம் பதி - bangalore, hsr layout,இந்தியா
02-ஜூன்-202305:34:20 IST Report Abuse
கால் தடம் பதி ஆனா தமிழக வைரமுத்து இன்னமும் மன்னிப்பு கூட கேக்க மாட்டாரு
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
02-ஜூன்-202309:06:06 IST Report Abuse
Rajaநாம எதுக்கு மன்னிப்பை எதிர்பாக்கணும். பேசாம வழக்கு போட வேண்டியதுதான....
Rate this:
Cancel
02-ஜூன்-202304:42:37 IST Report Abuse
குமரி குருவி சாமியார்களைஎப்படி நம்புவது...?சவாலான பக்தி மார்க்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X