''சும்மா இருந்த சங்கை, தமிழக அரசு ஊதிக் கெடுத்துடுச்சு பா...'' என்றபடியே சூடான டீயுடன் பெஞ்சில் வந்தமர்ந்தார், அன்வர்பாய்.
''என்ன ஓய் சொல்றீர்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானை தாக்கி இறந்து போறவங்க குடும்பத்துக்கு, அரசு, 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கிட்டு வருது... இதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தச் சொல்லி, அப்பகுதியை சேர்ந்த ஜனங்க ரொம்ப நாளா கோரிக்கை வச்சுட்டு வர்றாங்க... ஆனா, அரசு அதை கண்டுக்கலை பா...

''சமீபத்துல கள்ளச்சாராயம் குடிச்சு இறந்தவங்க குடும்பத்துக்கு அரசு, 10 லட்சம் ரூபாய் கொடுத்துச்சுல்ல... இதை நல்ல வாய்ப்பா பயன்படுத்திகிட்டு, 'யானை மிதிச்சு செத்தா, 5 லட்சம், சாராயம் குடிச்சு செத்தா, 10 லட்சமா'ன்னு அப்பகுதி மக்கள் கேள்வி கேட்குறாங்க... பதில் சொல்ல முடியாம அரசு அதிகாரிங்க முழிக்குறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.