'3டி' அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்
'3டி' அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்

'3டி' அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
ஹைதராபாத்: '3டி' எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அச்சடிக்கும், உலகின் முதல் ஹிந்து கோவில் தெலுங்கானாவில் அமைகிறது.கட்டுமானப் பணிகளில், முப்பரிமாண அச்சு என்ற நவீன முறை தற்போது பிரபலமாகி வருகிறது. கம்ப்யூட்டரில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. அதை சிறப்பு இயந்திரம் வாயிலாக அச்சடிக்கும் வகையில் கட்டுமானப் பணி நடக்கிறது.இந்த
Worlds first temple in 3D printing technology  '3டி' அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹைதராபாத்: '3டி' எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அச்சடிக்கும், உலகின் முதல் ஹிந்து கோவில் தெலுங்கானாவில் அமைகிறது.


கட்டுமானப் பணிகளில், முப்பரிமாண அச்சு என்ற நவீன முறை தற்போது பிரபலமாகி வருகிறது. கம்ப்யூட்டரில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. அதை சிறப்பு இயந்திரம் வாயிலாக அச்சடிக்கும் வகையில் கட்டுமானப் பணி நடக்கிறது.


இந்த தொழில்நுட்பத்தால் மிகக் குறுகிய காலத்தில் கட்டடம் கட்ட முடியும். மேலும், செலவும் குறைவு. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உலகின் முதல் ஹிந்து கோவில், தெலுங்கானாவின் சித்திபட் மாவட்டத்தின் புருகுபல்லியில் கட்டப்படுகிறது. அங்குள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், 3,800 சதுர அடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.


latest tamil news

விநாயகருக்காக கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்காக சிவலிங்கம் வடிவிலும், பார்வதிக்காக தாமரை வடிவிலும் இந்தக் கோவில் அமைய உள்ளது. 'சிம்ப்ளிபோர்ஜ் கிரியேஷன்ஸ்' என்ற 3டி தொழில்நுட்ப அச்சு தொழிலில் ஈடுபட்டு உள்ள நிறுவனம், இந்தக் கோவிலை கட்டுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

jayvee - chennai,இந்தியா
02-ஜூன்-202311:38:49 IST Report Abuse
jayvee ஹிந்து கோவில்களில் ஒரு உயிரோட்டம் இருக்கும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஜூன்-202307:08:03 IST Report Abuse
Kasimani Baskaran உடல் உழைப்பில் உருவானால் அதற்கு மதிப்பிருக்கும் - இல்லை என்றால் ஒரு செயற்கையாகவே உணரப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X