வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களில், ஜனநாயகத்துக்கான சவால்கள், அரசியல் கட்சிகள், எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்களை வெளியிடுகிறது. இது, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் மற்றும் பல மாநில கல்வி வாரியங்களால் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், இந்த பாட புத்தகங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
![]()
|
இந்நிலையில், 10ம் வகுப்புக்கான அறிவியல் மற்றும் ஜனநாயகம் ஆகிய பாட புத்தகங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அறிவியல் புத்தகத்தில், தனிமங்களின் கால அட்டவணை, எரிசக்திக்கான ஆதாரங்கள், இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் புத்தகத்தில், முக்கிய போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்துக்கான சவால்கள் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.