புகைச்சல் தான் உங்களை இப்படி பேச வைக்குது என்பதில் 'டவுட்'டே இல்லை!
புகைச்சல் தான் உங்களை இப்படி பேச வைக்குது என்பதில் 'டவுட்'டே இல்லை!

புகைச்சல் தான் உங்களை இப்படி பேச வைக்குது என்பதில் 'டவுட்'டே இல்லை!

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
காங்., முன்னாள் தலைவர் ராகுல்: பிரதமர் மோடி ஒரு தினுசானவர். வரலாற்று ஆய்வாளர்களுக்கு வரலாற்று பாடம் எடுப்பார். விஞ்ஞானிகளுக்கு அறிவியல் கற்றுத் தருவார். ராணுவத்தினருக்கு போர் முறைகள் கற்றுத் தருவார். ஒருவேளை கடவுளுடன் அமர்ந்து பேச, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், 'இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது' என, கடவுளுக்கே பாடம் எடுப்பார். தான் உருவாக்கிய பிரபஞ்சம்
There is no doubt that smoking makes you talk like this!  புகைச்சல் தான் உங்களை இப்படி பேச வைக்குது என்பதில் 'டவுட்'டே இல்லை!


காங்., முன்னாள் தலைவர் ராகுல்:

பிரதமர் மோடி ஒரு தினுசானவர். வரலாற்று ஆய்வாளர்களுக்கு வரலாற்று பாடம் எடுப்பார். விஞ்ஞானிகளுக்கு அறிவியல் கற்றுத் தருவார். ராணுவத்தினருக்கு போர் முறைகள் கற்றுத் தருவார். ஒருவேளை கடவுளுடன் அமர்ந்து பேச, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், 'இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது' என, கடவுளுக்கே பாடம் எடுப்பார். தான் உருவாக்கிய பிரபஞ்சம் குறித்த புதிய தகவல்களை கேட்டு கடவுளே குழப்பம் அடைந்து விடுவார்.டவுட் தனபாலு:

ஆஸ்திரேலிய பிரதமர், 'மோடி தான் பாஸ்' என்கிறார்... இத்தாலி பிரதமர், 'உலகின் சிறந்த தலைவர் மோடி' என்கிறார்... 'மோடி சொன்னால் தான், ரஷ்ய அதிபர் கேட்பார்'னு, உலக நாடுகள் நம்மகிட்ட பஞ்சாயத்துக்கு வர்றாங்க... இதை எல்லாம் பொறுக்க முடியாம உருவான புகைச்சல் தான், உங்களை இப்படி பேச வைக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!


***தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

அமைச்சர் தியாகராஜன் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லை. அவர் துறையை மாற்றி இருப்பது, திராவிட மாடல் அரசில் யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை எடுத்துரைக்கிறது. அவரை மாற்றியது, மதுரை மண்ணுக்கு தி.மு.க., செய்த மாபெரும் துரோகம்.டவுட் தனபாலு:

நீங்க வெளியிட்ட ஆடியோவால, தியாகராஜன் துறையை தான் இப்ப மாத்தி இருக்காங்க... இப்படியே தொடர்ந்து அவருக்கு வக்காலத்துவாங்கிட்டு இருந்தீங்கன்னா, சீக்கிரமா அமைச்சரவையை விட்டே துாக்கி கடாசிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


latest tamil news

***தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்:

மேகதாது அணை கட்ட, தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவியேற்றதும், வேறு பணிகளை செய்வார் என்று நினைத்தோம். ஆனால், அண்டை மாநிலங்களுடன், அவர் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.டவுட் தனபாலு:

கர்நாடகாவில், காங்., பதவி ஏற்ற, 10 நாளிலேயே, மேகதாது விவகாரத்தை கையில் எடுத்துட்டாங்க... உங்க கூட்டணி கட்சியா வேற இருக்கறதால, இனி இந்த விவகாரத்துல எதிர்க்கட்சிகாரங்க கொடுக்க போற குடைச்சலை சமாளிக்கறதுக்குள்ள, உங்களுக்கு நாக்கு தள்ளிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (6)

02-ஜூன்-202315:10:42 IST Report Abuse
மதுமிதா இது Volcano புகைச்சல் குடும்பத்திற்கே
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202311:49:16 IST Report Abuse
venugopal s இதே ஆஸ்திரேலியா, இத்தாலி பிரதமர்கள் அடுத்து காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆனால் அவரையும் இந்திரன், சந்திரன் என்று தான் புகழ்வார்கள்,இதை எல்லாம் உண்மை என்று நம்பி சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள சங்கிகளால் மட்டுமே முடியும்!
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
02-ஜூன்-202307:32:16 IST Report Abuse
Balasubramanian புகை மற்றும் பகை உடல் நலத்திற்கு தீங்கானது😁
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X