'புது பார்லி.,யில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார்'
'புது பார்லி.,யில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார்'

'புது பார்லி.,யில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார்'

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (29) | |
Advertisement
பழநி: '' புதிய பார்லிமென்டில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார். இது தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்துகிறது,'' என, பழநி சாது சண்முக அடிகளார் கூறினார்.டில்லியில் நடந்த புது பார்லிமென்ட் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசி வழங்கிய பழநி சாது சண்முக அடிகளார், நேற்று மாலை பழநி ஆசிரமத்திற்கு
Prime Minister Modi has placed the scepter at the highest place in New Parliament'புது பார்லி.,யில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பழநி: '' புதிய பார்லிமென்டில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார். இது தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்துகிறது,'' என, பழநி சாது சண்முக அடிகளார் கூறினார்.

டில்லியில் நடந்த புது பார்லிமென்ட் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசி வழங்கிய பழநி சாது சண்முக அடிகளார், நேற்று மாலை பழநி ஆசிரமத்திற்கு திரும்பினார். அவருக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் சாது சண்முக அடிகளார் மடத்தில் பேசியதாவது: முந்தைய பார்லிமென்ட் 90 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன் நிர்வாகம், அலுவலக பணி தொடர்பாக ஆண்டு தோறும் ரூ.1500 கோடி செலவானது. தற்போது அமைந்துள்ள பார்லிமென்ட் கட்டடத்தில் நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் மிகப்பெரிய செலவு குறையும்.


latest tamil news


புதிய பார்லிமென்டில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார். இது தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்துகிறது. இந்நிகழ்ச்சிக்கு பழநியிலிருந்து என்னையும், புலிப்பாணி பாத்திர சுவாமிகளையும் அழைத்தனர். இது பழநிக்கு பெருமையானது.

பார்லிமென்டில் பிரதமர் நடந்து கொண்ட விதம் நாட்டில் இனி அவரது ஆட்சி தொடரும் என்பதை உணர்த்துகிறது. தமிழை மிகப் பழமையான மொழி என பறைசாற்றுகிறார், என்றார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202318:54:25 IST Report Abuse
Rajagopal இந்த செங்கோல் இந்தியா முழுவதையும் ஒன்றிணைக்கும் ஒரு அடையாளம். தென்னகத்தில் சோழ மன்னர்கள் தருமத்தை நிலை நாட்டி, நான் திராவிடன், நீ வடக்கன் என்று பாகுபடுத்திப் பாராமல், கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் பெற்று, இந்திய கலாச்சாரத்தை முழுவதும் கடைபிடித்தவர்கள். செங்கோல் இன்று ஒரு புதிய சகாப்தத்தை துவங்கியிருக்கிறது. இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால். ஆனால் அது தாண்டியும் நாம் மனதளவில் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அடிமையாகவே செயல் பட்டிருக்கிறோம். அவர்களுக்கு அடிபணிந்து, அவர்களது ஒப்புதலுக்காகக் காத்திருந்து, அவர்களை சார்ந்து, அவர்களது கண்ணோட்டங்களை வளர்த்து அடிமையாகவே இருந்திருக்கிறோம். இன்று இந்த செங்கோல் மூலமாக, அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுகிறோம் என்பதை நமது பிரதமர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் தமிழ்ப் பண்பாடை அடிப்படையாக வைத்து, தென்னகத்தை முழுதும் இணைத்திருக்கிறார். திராவிட, காங்கிரஸ், ஆங்கிலேய அடிவருடிகளின் மர்மஸ்தானத்தில் படும் படி அடித்திருக்கிறார். நமது நாடு இனிமேல் உலகுக்கே வழிகாட்டும் நாடாக மாறும். அதை அனைவரும் கொண்டாடுவோம்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-ஜூன்-202318:25:43 IST Report Abuse
g.s,rajan Yes, it is kept at a very high Place....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஜூன்-202316:44:36 IST Report Abuse
r.sundaram இப்படி பாத்தால் நீதிமன்றங்களில் கண்ணைக்கட்டிக்கொண்டு தராசை பிடித்துக்கொண்டு இருக்கும் பெண் சிலை எதற்கு? மனுநீதி சோழன் தனது புதல்வனை தேரின் சக்கரத்தில் இடும் சிலை எதற்கு? முதல் ஒரிஜினல் அரசியல் சட்டம் ஏழுதிய புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ராமாயண மஹாபாரத ஓவியங்கள் பின்புலத்தில், அதன்மேல் அரசியல் சட்டம் ஏழுதப்பட்டு உள்ளது. அது தேவையா? அந்த புத்தகத்தில் உள்ள அரசியல் சாசன வரைவில் செக்குலரிஸம் மற்றும் மதசார்பின்மை கிடையாது. அவை பின் நாட்களில், நாடு அவசரநிலையில் இருக்கும்போது (எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாதபோது) இந்திராவால் தன்னிச்சையாக கொண்டுவரப்பட்ட திருத்தங்கள். ஆக இந்த புது பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் இருப்பதும், மற்றுமுள்ள சிற்பங்கள் இருப்பதும் சரிதான். மேலால் இந்தியா துண்டாடப்பட்டது அரசியல் ரீதியாகவோ, அல்லது சமூக பொருளாதார ரீதியாகவோ அல்ல. முஸ்லிம்கள் தங்களுக்கென தனிநாடு வேண்டும் என்று கேட்கவே தனிநாடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் நியாயமாக இருப்பார்கள் என்றால் முஸ்லிம்கள், பாகிஸ்தானுக்கு சென்றிருக்க வேண்டும். இன்னமும் இங்கே உட்கார்ந்து கொண்டு இந்திய உணவை சாப்பிட்டுக்கொண்டு, இந்தியாவுக்கு/ஹிந்து மதத்துக்கு எதிராக இவர்கள் செயல்படுவது நியாயம் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X