செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின், பச்சிளம் குழந்தைகள் பிரிவில், முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர் மற்றும் பயிற்சி பெண் டாக்டர் ஆகியோர், கடந்த 30ம் தேதி பணியில் இருந்தனர். அப்போது, பெண் டாக்டருக்கு, முதுநிலை மாணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை கண்டித்து, நேற்று முன் தினம் பயிற்சி டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, பயிற்சி பெண் டாக்டர் மற்றும் முதுநிலை மாணவரிடம், மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீ தலைமையில், டாக்டர் குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவரை இடை நீக்கம் செய்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர், தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பிப்.27ல் 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்தூர் மகளிர் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இவ்வழக்கை இன்ஸ்பெக்டர் தேவமாதா விசாரித்தார். இதில் 42 நாட்களில் குற்ற இறுதி அறிக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.
சிறையில் செருப்பில் கஞ்சா கடத்தல்
மதுரை சிறையில் உள்ள, தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த தண்டனை கைதி முத்துகணேசன், 42, கஞ்சாவை செருப்பில் வைத்து கடத்திச் சென்று, சக கைதிகளுக்கு கொடுத்தது தெரிந்தது. விசாரணையில், பெண் வழக்கறிஞர் அவரை சந்தித்த போது, கஞ்சாவை செருப்புக்குள் வைத்து கொடுத்தது உறுதியானது. சிறைக்குள் எடுத்துச்சென்ற முத்துகணேசன், கஞ்சா இருந்த செருப்பை சக கைதி சத்தியராஜிடம் கொடுத்துள்ளார். அவர் அதை, 'அட்டாக்' பாண்டி கூட்டாளி ரூபனிடம் கொடுத்தார். ரூபனிடம் நடத்திய சோதனையில், 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.1.22 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
மலேஷியா மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 72.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம், திருச்சி விமான நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்டது.
![]()
|
செவிலியரிடம் நகை பறிப்பு
தென்காசிமாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிபட்டியை சேர்ந்த ராமநாதன் மனைவி புஷ்பா 55. இவர் சுரண்டையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள மார்க்கெட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த வாலிபர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 55 கிராம் நகையை பறித்துவிட்டு தப்பினார். சுரண்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
நுால் வியாபாரி வீட்டில் 50 சவரன் கொள்ளை
சேலம், மரவனேரி, ஏழாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 66; நுால் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா, 60. சூரமங்கலத்தில் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்று, இரவு, 10:00 மணிக்கு வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த, 70 சவரன் நகைகளை படுக்கை அறையில் வைத்தார். மற்றொரு அறையில் இருவரும் துாங்கினர்.
அதிகாலை, 2:30 மணிக்கு நகை இருந்த அறையில் சத்தம் கேட்கவே, தம்பதியர் சென்று பார்த்த போது, மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்து ஓடியது தெரிந்தது. வீட்டு முன்புற கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அறையில் வைத்திருந்த, 70 சவரனில், 50 சவரன் நகை கொள்ளை போனது தெரிய வந்தது. அஸ்தம்பட்டி போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, துணை கமிஷனர்கள் லாவண்யா, கவுதம் கோயல், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
மனைவியை கொன்று நாடகம்: கணவன் கைது
திருப்பூர், சிறுபூலுவபட்டி, ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 27. இவரது மனைவி வெண்ணிலா, 24. இரு குழந்தைகள் உள்ளனர்.தம்பதியர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். சந்தோஷ், மது பழக்கத்துக்கு அடிமையானதால், வேலைக்கு செல்வதில்லை.
கடந்த, 30ம் தேதி தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், சந்தோஷ் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து வெண்ணிலாவை கொலை செய்தார். போலீசில் சிக்காமல் இருக்க வெண்ணிலா தற் கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். போலீஸ் விசாரணையிலும், பிரேத பரிசோதனையிலும் சந்தோஷ், வெண்ணிலாவை கொலை செய்தது தெரியவந்தது. வேலம்பாளையம் போலீ சார், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, சந்தோைஷ கைது செய்தனர்.