'தொகுதியை பிடிக்கறதுல, பா.ஜ., - அ.தி.மு.க., பிரமுகர்களுக்குள்ள பயங்கர போட்டியாமே ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''அடுத்த வருஷம் நடக்கப்போற லோக்சபா தேர்தல்ல, விருதுநகர் தொகுதியை எப்படியாவது பிடிச்சிடணும்னு பா.ஜ., மாநில நிர்வாகி சீனிவாசன், 'ஸ்கெட்ச்' போட்டுண்டு இருக்கார்... எம்.பி., யாகிட்டா, மத்திய அமைச்சர் பதவியை பிடிக்கறது, 'ஈசி' ஆகிடுமோல்லியோ...
''அதேசமயம், திருப்பரங்குன்றம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மகனும், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியுமான ராஜ் சத்யனும், விருதுநகர் தொகுதிக்கு குறிவச்சு காய் நகர்த்திண்டு இருக்கார் ஓய்...
![]()
|
''விருதுநகர் எம்.பி., தொகுதிக்கு உள்ள தான், திருப்பரங்குன்றம் சட்டசபைதொகுதியும் இருக்கு... அ.தி.மு.க.,வுல இங்க வலுவான ஆள் இல்லை... பா.ஜ., சீனிவாசனுக்கு நபார்டு வங்கி இயக்குனர் பதவி சமீபத்துல கொடுத்தாளோல்லியோ... அதனால, அவர் போட்டிக்கு வரமாட்டார்னு ராஜ் சத்யன் கணக்கு போடறார்...
''எப்படியாவது விருதுநகரை அ.தி.மு.க., வுக்கு வாங்கிட்டா, அப்புறம் 'சீட்' வாங்கறது சுலபம் தான்னு, இப்பவே அதுக்கான வேலையில ராஜ் சத்யன் மும்முரமாகிட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.