வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழநி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை கோயில்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பால்குடம் எடுத்தும், வேல்குத்தியும், நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். காவடி எடுத்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.