12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்
12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | |
Advertisement
சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (2.6.2023 முதல் 8.6.2023 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்சுக்கிரன், சனி நன்மைகளை வழங்குவர். முருகப்பெருமான் வழிபாடு சங்கடம் போக்கும்.அசுவினி : வாரத்தின் முதல் நாளில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அதன்பின் உங்கள் முயற்சி லாபமாகும். வருமானத்திற்குரிய
Weekly result and remedy for 12 zodiac signs  12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (2.6.2023 முதல் 8.6.2023 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்சுக்கிரன், சனி நன்மைகளை வழங்குவர். முருகப்பெருமான் வழிபாடு சங்கடம் போக்கும்.

அசுவினி : வாரத்தின் முதல் நாளில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அதன்பின் உங்கள் முயற்சி லாபமாகும். வருமானத்திற்குரிய செயல் வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பரணி : அரசு வழி முயற்சியில் நன்மை உண்டாகும். தொழில் சுமாராக செல்லும். திட்டமிட்ட பணி நிறைவேறும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த சங்கடம் விலகும். செலவிற்கேற்ற பணவரவு உண்டு. சனிக்கிழமை செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

கார்த்திகை 1ம் பாதம் : லாபஸ்தான சனியால் முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர். ஞாயிறு அன்று அமைதி காப்பது நலம்.


சந்திராஷ்டமம்


2.6.2023 இரவு 12:01 மணி - 5.6.2022 அதிகாலை 4:40 மணி

ரிஷபம்செவ்வாய், சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை மனதில் எண்ணி வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கார்த்திகை 2, 3, 4 : கடந்த வாரத்தில் தடைபட்ட பணிகள் நடந்தேறும். வாரத்தின் முதல் மூன்று நாட்களும் முயற்சி வெற்றி பெறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் பலிதமாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திங்கள் அன்று விழிப்புணர்வு அவசியம்.

ரோகிணி :
உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். பணியிடத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த செயலில் நன்மையான பலன் அதிகரிக்கும். செவ்வாய் அன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மிருகசீரிடம் 1, 2: மூன்றாமிட செவ்வாயால் உங்கள் சங்கடம் விலகும். ஜீவனஸ்தான சனியால் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். திடமான சிந்தனையுடன் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். புதன் அன்று செயல்களில் சங்கடம் உண்டாகலாம்.


சந்திராஷ்டமம்


5.6.2023 அதிகாலை 4:41 மணி - 7.6.2023 காலை 7:45 மணி

மிதுனம்சனி, குரு, ராகு முன்னேற்றத்தை வழங்குவார். உலகளந்த பெருமாளை மனதில் எண்ணி வழிபட்டு வர நன்மை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 3, 4 : கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர். நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செவ்வாய்,புதன் அன்று அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் முயற்சி முன்னேற்றம் தரும். முதல் வருவாய் அதிகரிக்கும்.

திருவாதிரை : லாபஸ்தான குருவும் ராகுவும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். வராமல் இருந்த பணம் வசூலாகும். அதன்பின் உங்கள் முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும். புதன் வியாழன் அன்று செயல்களில் கூடுதல் கவனம் தேவை. பைனான்ஸ் தொழில், ரியல் எஸ்டேட் லாபத்தில் செல்லும்.

புனர்பூசம் 1, 2, 3: உங்கள் முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும் வாரம் இது. குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை அமையும். பிறரால் திடீர் நன்மை ஏற்படும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாழன் அன்று விழிப்புணர்வும் எச்சரிக்கையும் அவசியம்.


சந்திராஷ்டமம்


7.6.2023 காலை 7:46 மணி - 9.6.2023 காலை 10:07 மணி

கடகம்சுக்கிரன், புதன், சூரியன் நன்மைகளை வாரி வழங்குவர். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி செயல்பட தெளிவு உண்டாகும்.

புனர்பூசம் 4: வாரத்தின் முதல் நாளே உங்கள் எண்ணம் நிறைவேறும் என்றாலும் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். லாப ஸ்தான சூரியன் அரசு வழி முயற்சிகளில் பக்கபலமாக இருப்பார். புதிய சொத்துகள் வாங்குவீர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும் நிதி நிலை உயரும்.

பூசம் : நெருக்கடி விலகி உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் வாரம் இது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

ஆயில்யம் : உங்கள் செயல்களின் வழியே ஆதாயம் காணும் வாரம் இது. தொழிலில் இருந்து வந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். எல்லாமே சாதகமாக முடியும் என்றாலும் யோசித்து செயல்படுவது நல்லது.


சிம்மம்கேது, குரு, சூரியன், புதன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். அனுமனை வழிபட சங்கடம் போகும்.

மகம் : உங்கள் எண்ணம் நிறைவேறும் வாரம் இது. உங்கள் முயற்சி வெற்றி பெறும். நிதிநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஞானக்காரகன் அருளால் செயல்களில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

பூரம்: வாரத்தின் முற்பகுதியில் ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். ஒரு சில செயல்களை யோசிக்காமல் செய்து அதில் லாபம் அடைவீர். உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பும் மரியாதையும் கூடும். வருமானம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகி உற்சாகம் அதிகரிக்கும்.

உத்திரம் 1: பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனால் உங்கள் முயற்சி வெற்றியாகும். மூன்றாமிட கேதுவின் அருளால் நீண்ட நாட்களாக மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அரசு பணியாளர்கள் பாராட்டப்படுவீர்கள்.


கன்னிசனி, செவ்வாய், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். திருவெண்காடு புத பகவானை மனதில் எண்ணி வழிபட வாழ்க்கை வளமாகும்.

உத்திரம் 2, 3, 4: லாப ஸ்தான செவ்வாயால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடம் விலகும். நிதி நிலை உயரும். பூமி, நிலம் வாங்கும் முயற்சி அனுகூலமாகும். எதிரிகளின் தொல்லை விலகும்.

அஸ்தம் : தொழிலில் சிந்தித்து செயல்பட லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி பலிதமாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். வருவாய் அதிகரிக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு,மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

சித்திரை 1, 2: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காணும் வாரம் இது. உடலில் இருந்த சங்கடம் விலகி உற்சாகம் அடைவீர். எதிரிகள் உங்களை விட்டு முற்றிலும் விலகிச் செல்வர். வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.


துலாம்குரு, புதன் நன்மையை வழங்குவர். துர்கையை வழிபட்டு வர சங்கடம் விலகும்.

சித்திரை 3, 4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். தெளிவான சிந்தனையுடன் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவீர். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சி ஆதாயமாகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும்.

சுவாதி : குரு பகவானின் பார்வையால் உங்கள் சங்கடம் நீங்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வராமல் இருந்த பணம் வசூலாகும் செயல்களில் லாபநிலை உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விசாகம் 1, 2, 3: இந்த வாரம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு வழியிலான முயற்சிகளில் நன்மை அதிகரிக்கும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பணியாளர்கள் ஒரு சிலருக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.


விருச்சிகம்ராகு, சுக்கிரன் நன்மையை வழங்குவர். திருச்செந்தூர் சுப்பிரமணியப்பெருமானை மனதில் எண்ணி வழிபட அல்லல்கள் தீரும்.

விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. நினைத்தவற்றை சாதித்து முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். நிதி நிலை சீராகும். புதிய முயற்சி பலிதமாகும். வாரத்தின் முதல் நாளில் திடீர் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும்.

அனுஷம் : யோகமான வாரம் இது. உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடை விலகும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும். தொழிலை விருத்தி செய்து லாபம் காண்பீர். வெள்ளி அன்று நெருக்கடி உண்டாகும் என்பதால் செயல்களில் நிதானம் தேவை.

கேட்டை : ஆறாமிட ராகுவால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வாழ்க்கையில் உண்டான சங்கடம் விலகும். முயற்சியில் ஆதாய நிலை ஏற்படும். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். வெள்ளி அன்று அதிகப்படியான செலவு ஏற்படும்.


தனுசுசனி, குரு, சுக்கிரன், புதன், கேது நன்மைகளை வழங்குவர். வீரட்டேஸ்வரரை மனதில் எண்ணி வழிபட துன்பம் அகலும்.

மூலம் :
மூன்றாமிட சனி, ஐந்தாமிட குருவினால் உங்கள் செயல்கள் எளிதாக நடந்தேறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில்,வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகள் லாபமாகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். சனி ஞாயிறு அன்று பண விவகாரத்தில் கவனம் தேவை.

பூராடம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர். பணம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். திட்டமிட்டு செயல்படுவதின் வழியாக உங்கள் விருப்பம் நிறைவேறும். சனி ஞாயிறு அன்று செலவு அதிகரிக்கும்.

உத்திராடம் 1: நெருக்கடியான நிலை விலகி நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். சனி ஞாயிறு அன்று புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.


மகரம்சந்திரன் நன்மைகளை வழங்குவர். நவகிரக வழிபாடு சங்கடம் போக்கும்.

உத்திராடம் 2, 3, 4: உங்கள் முயற்சிக்கேற்ற நன்மை உண்டாகும் வாரம் இது. நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் வெற்றியாகும். தொழிலில் இருந்து வந்த தடை விலகும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். திங்கள் செவ்வாய் அன்று செலவுகள் அதிகரிக்கும்.

திருவோணம் : கடந்த வார சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். உங்கள் முயற்சிகள் யாவும் ஒவ்வொன்றாய் நிறைவேறும். தொழிலில் உண்டான தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். திங்கள் செவ்வாய் அன்று பண விவகாரத்தில் கவனம் தேவை.

அவிட்டம் 1, 2: நெருக்கடி விலகி நன்மைகள் அதிகரிக்கும் வாரம் இது. உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். தேவைக்கேற்ற பணம் வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் முடியாத செயலை செய்து காட்டுவீர்கள். திங்கள் செவ்வாய் அன்று செலவுகளில் கவனம் தேவை.


கும்பம்ராகு, புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். சனிஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அவிட்டம் 3, 4: நெருக்கடி விலகி நன்மைகளைக் காண்பீர்கள். பிரச்னைகளை சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதன் வியாழன் அன்று செலவு அதிகரிக்கும்.

சதயம் : மூன்றாமிட ராகுவும் ஆறாமிட செவ்வாயும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். அரசு வழியிலான முயற்சி ஆதாயமாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதன் வியாழன் அன்று செலவுகளால் நன்மை அடைவீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3: நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும், வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.பண வரவு திருப்தி தரும், புதன் வியாழன் அன்று செலவுகளில் கவனம் தேவை.


மீனம்குரு, சூரியன், சுக்கிரன், நன்மைகளை வழங்குவர். குல தெய்வத்தை வழிபட்டு செயல்பட வாழ்க்கை வளமாகும்.

பூரட்டாதி 4: வாரத்தின் முதல் நாளில் சில தடைகளை சந்திப்பீர்கள் அதன்பின் உங்கள் எண்ணம் பலிதமாகும். தொழிலில் ஏற்படும் முன்னேற்றம் தீவிரமாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். மற்றவர் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும்.

உத்திரட்டாதி: வாரத்தின் முதல் நாளில் தடை தாமதம் என்ற நிலை ஏற்படும். அதன்பின் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு பணியில் இடமாற்றம் உண்டாகும்.

ரேவதி : நீங்கள் எதிர்பார்த்த செயல் ஆதாயமாகும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். இரண்டாமிட குரு உங்கள் குடும்பத்தில் நன்மைகளை ஏற்படுத்துவார். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்.தொழிலில் தீவிர முன்னேற்றம் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம்

31.5.2023 மாலை 5:06 மணி - 2.6.2023 இரவு 12:00 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X