ரகுராம் ராஜனை வெளுக்கும் பா.ஜ.க.,வினர்: சமூக வலைதளத்தில் இன்று!
ரகுராம் ராஜனை வெளுக்கும் பா.ஜ.க.,வினர்: சமூக வலைதளத்தில் இன்று!

ரகுராம் ராஜனை வெளுக்கும் பா.ஜ.க.,வினர்: சமூக வலைதளத்தில் இன்று!

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (44) | |
Advertisement
முன்னாள் ஆர்.பி.ஐ., கவர்னரும், தலைமை பொருளாதார ஆலோசகருமாக இருந்த ரகுராம் ராஜன், முன்னதாக ராகுலுக்கு அளித்த பேட்டியில் 2022 - 23 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி., 5 சதவீதத்தை எட்டினாலே நாம் அதிர்ஷடசாலிகள் என கூறியிருந்தார். சமீபத்தில் வெளியான தரவுகளின் படி ஜி.டி.பி., 7.2% ஆக பதிவாகியுள்ளது. இதனால் ரகுராம் ராஜனை தங்களது விமர்சனத்தால் பா.ஜ.க.,வினர் வெளுத்து வாங்குகின்றனர்.மத்திய
BJP members mocking Raghuram Rajan: Today on social media!  ரகுராம் ராஜனை வெளுக்கும் பா.ஜ.க.,வினர்: சமூக வலைதளத்தில் இன்று!

முன்னாள் ஆர்.பி.ஐ., கவர்னரும், தலைமை பொருளாதார ஆலோசகருமாக இருந்த ரகுராம் ராஜன், முன்னதாக ராகுலுக்கு அளித்த பேட்டியில் 2022 - 23 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி., 5 சதவீதத்தை எட்டினாலே நாம் அதிர்ஷடசாலிகள் என கூறியிருந்தார். சமீபத்தில் வெளியான தரவுகளின் படி ஜி.டி.பி., 7.2% ஆக பதிவாகியுள்ளது. இதனால் ரகுராம் ராஜனை தங்களது விமர்சனத்தால் பா.ஜ.க.,வினர் வெளுத்து வாங்குகின்றனர்.

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை வெளியிடுகிறது. அதன்படி சமீபத்தில் 2022 - 23 நிதியாண்டின் இறுதி காலாண்டு முடிவுடன் மொத்த ஆண்டிற்குமான ஜி.டி.பி., முடிவுகள் வெளியானது. வளர்ச்சி 7.2% ஆக பதிவாகியுள்ளது. இது பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளை எல்லாம் முறியடித்துள்ளது.


latest tamil news


2021 - 22ல் இந்திய ஜி.டி.பி.,யின் மதிப்பு ரூ.234 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.272.4 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 16.1% வளர்ச்சி. உலகப் பொருளாதாரங்களில் இந்த அளவு வளர்ச்சியை எந்த நாடும் பதிவு செய்யவில்லை. சீனாவிலும் மந்தநிலை நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் விலைவாசி உயர்வால் பிரச்னை இருக்கிறது.


latest tamil news


இந்நிலையில் தான் இந்தியப் பொருளாதாரம் குறித்து முன்னாள் ஆர்.பி.ஐ., கவர்னர் ரகுராம் ராஜன் எதிர்மறையான கருத்தை தெரிவித்திருந்தார். ராகுலின் பாரத் ஜோடோ பயணத்தின் போது பேசிய அவர் இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறைந்திருப்பதாகவும், 5 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியை எட்டினாலே நாம் அதிர்ஷ்டசாலிகள் என தெரிவித்திருந்தார். தற்போது அந்த வீடியோவை எடுத்துப் போட்டு, காங்கிரஸின் ஊது குழலாக ரகுராம் ராஜன் மாறிவிட்டார். அதனால் தான் அவரது கணிப்புகள் பொய்கின்றன என விமர்சித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (44)

sankar - Nellai,இந்தியா
08-ஜூன்-202312:45:38 IST Report Abuse
sankar விவரம் தெரிந்த ......
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
05-ஜூன்-202311:33:22 IST Report Abuse
Narasimhan மோடிக்கும் அதானிக்கும் என்ன கனெக்ஷன் என்று கேட்கிறானே. இவனுக்கும் ரகுராம் ராஜனுக்கும் என்ன கனெக்ஷன்? இவனோட ஸ்விஸ் வங்கிக்கணக்கை நிர்வாகிக்கிறாரோ ?
Rate this:
Cancel
03-ஜூன்-202308:54:34 IST Report Abuse
பேசும் தமிழன் இவனை எப்படி முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்தார்கள் .....ஒரு பாமரனுக்கு இருக்கும் அறிவு கூட இவனுக்கு இல்லை பொல் தெரிகிறது
Rate this:
04-ஜூன்-202320:16:14 IST Report Abuse
raghasrintrue .pet .og for congress party. better to keep his mouth shut or take advice from farmer FM OF INDIA...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X