வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் செய்த அப்பீல் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்தவர், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். 2015ல், வேறு ஜாதி பெண்ணை காதலித்தார். அவருடன், திருச்செங்கோட்டில் ஒரு கோவிலுக்குச் சென்றபோது, சிலரால், கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை மதுரை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், சந்திரசேகரன். செல்வராஜ், பிரபு, கிரிதர் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் வாழ் நாள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும் எனக்கூறி, அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.