அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள்: வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை
அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள்: வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை

அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள்: வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: ‛‛ டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் '', என 1983ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் கவலையையும் தொந்தரவையும் கொடுத்துள்ளது. கடுமையாக உழைத்து
Dont Take Any Hasty Decision: Indias 1983 World Cup Winners Urge Wrestlersஅவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள்: வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ‛‛ டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் '', என 1983ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் கவலையையும் தொந்தரவையும் கொடுத்துள்ளது. கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த பதக்கங்கள் ஆனது பல வருட முயற்சி, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தை உள்ளடக்கியது. அவை, உங்களுக்கு மட்டும் அல்லாமல் நாட்டிற்கும் பெருமை தேடி த்தந்தது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.


உங்களின் பிரச்னைகள் மற்றும் குறைகள் கேட்கப்பட்டு அவை விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டத்தின் ஆட்சி நிலைபெறட்டும். இவ்வாறு அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.

1983ம் ஆண்டு ஜூன் 25 ல் நடந்த உலக கோப்பை பைனலில் விளையாடிய இந்திய அணியில் கபில் தேவ், கவாஸ்கர், அமர்நாத், ஸ்ரீகாந்த், சையத் கிர்மானி, யஷ்பால் சர்மா, மதன்லால், பல்விந்தர் சிங் சந்து, சந்தீப் பாட்டீல், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பைனலில், மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி முதல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (12)

True Indian -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202323:14:27 IST Report Abuse
True Indian Let them throw their medals in to Ganga.So what? Who is the loser? Let them not threaten the govt with such gimmicks.Also,they are free to undertake Jalasamadhi if they wish too
Rate this:
Cancel
Bhakt - Chennai,இந்தியா
02-ஜூன்-202320:11:44 IST Report Abuse
Bhakt இவர்கள் கூறியது பொய் என்று தெரிய வந்தால். இவர்களுக்கு அரசு கொடுத்த பணம் மற்றும் சலுகைகள் திரும்ப பெறப்பட வேண்டும். இவர்களை வாழ் நாள் தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
02-ஜூன்-202320:00:52 IST Report Abuse
தத்வமசி அடுத்த மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் வரை இது போல பல நாடகங்களை புதுடில்லி காணலாம், எல்லா பத்திரிக்கைகளிலும் இது போன்ற நாடகங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்கள். தமாசு தமாசு. ஒருத்தரு வெளிநாடு போயிருக்காரு. வந்த சில நாட்களில் இந்தியாவில் ஏதாவது நடக்கலாம். இதையெல்லாம் மக்கள் கவனித்து அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X