ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டன்னி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் பிரியதர்ஷினி, 19, அவிநாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி பிரியதர்ஷினி கடந்த 30ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், மாணவியின் செல்போனை பெற்றோர் ஆய்வு செய்தபோது சந்தேகம் எழுந்தது. இது குறித்து கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜசேகரன், வி.ஏ.ஓ., அஜய் கான், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில், மருத்துவக் குழுவினர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கூறுகையில், மாணவியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதால் இயற்கைக்கு மாறான மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ அறிக்கைக்கு பின் முழு தகவல் தெரிய வரும். என்றார்.