வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். டில்லி நிர்வாகம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை பார்லி. ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் தடுக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை சந்தித்து வருகிறார்.
![]()
|
தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். இன்று (ஜூன்.02) ஜார்க்கண்ட் சென்றுள்ள கெஜ்ரிவால், ராஞ்சியில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார். அப்போது அவசர சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கெஜ்ரிவாலுடன் ,பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானும் சென்றார்.